கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஜெயம் ரவி நடித்த கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக அவர் இயக்கியுள்ள படத்தில் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக இவானா என்பவர் நடிக்க, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக சத்யராஜின் மகளை காதலித்து அவரிடம் திருமணத்திற்கு நாயகன் பிரதீப் சம்மதம் கேட்பதாகவும் இருவருடைய மொபைல் போன்களையும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு ஆளுக்கு ஒரு நாள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் பின்பு அவர்களுக்குள் காதல் இருந்தால் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்றும் ஒரு புதிய யுத்தியை சத்யராஜ் மேற்கொள்வதாகவும் அதன்பிறகு இருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள்தான் படம் என்பதும் டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.
இளைஞர்களை கவரும் அம்சமாக நிறைய வசனங்களும் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தாலும் டிரைலரின் இறுதிக்காட்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசும் ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டு உள்ளது. மியூட் செய்து விட்டால் மட்டும் ரசிகர்களுக்கு அது தெரியாது என நினைத்து வேண்டுமென்றே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது போல அந்த வார்த்தையை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வலிந்து திணித்து மியூட்டும் செய்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு சோசியல் மீடியாவில் பலர் கண்டனம் தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.