அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
மலையாளத்தில் சமீபகாலமாக முன்னணி நடிகராக மாறியுள்ள டொவினோ தாமஸ் நடித்துவரும் படங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன. அந்தவகையில் மின்னல் முரளி, சமீபத்தில் வெளியான தள்ளுமால ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்கிற படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். 1900, 1950 மற்றும் 1990 என மூன்று காலகட்டத்தில் நிகழும் விதமாக உருவாகும் இந்தப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் டொவினோ தாமஸ்.
அதற்கேற்றபடி இந்தப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெறுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் முதன்மை கதாநாயகியாக தெலுங்கில் பிரபலமான கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இந்தநிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்கிற புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஜித்தின் லால் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.