வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |

வீரமே வாகை சூடும் படத்தை அடுத்து லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதில் விஷால் - சுனைனா இணைந்து நடித்து வரும் படம் லத்தி படத்தை வினோத் என்பவர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் போலீஸ் கதையில் உருவாகி இருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் ‛தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்' என்று தொடங்கும் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துரை என்பவர் பாடல் வரிகளை எழுத, யுவன் ஷங்கர் ராஜா, விக்கி ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். விஷாலின் அதிரடியான சண்டை காட்சியுடன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.