ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

கண்ணன் ரவி தயாரிப்பில், நிதேஷ் சஹதேவ் இயக்கத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வெற்றி விழா, சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சமுத்திரக்கனி, மற்றும் சீமான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி, ஜீவா அம்மா, மனைவி, மகனும் கலந்து கொண்டனர். தனது பேரனை மேடையில் பலர் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார் ஆர்.பி.சவுத்ரி, என்னை விட அவனுக்கு நல்லா தாடி வளருது என்று அப்போது கலாய்த்தார் ஜீவா.
விழாவில் ஆர்.பி.சவுத்ரி பேசுகையில் ''இந்த படத்தின் வெற்றிக்கு கதைதான் காரணம். படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். ரொம்ப நாளுக்குபின் ஜீவாவுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி. பொதுவாக நான் இந்த மாதிரி விழாக்களுக்கு அதிகம் வருவது இல்லை. இன்று எனக்கு ஜீவா பிஎம்டபுள்யூ கார் வாங்கி கொடுத்ததால் வந்தேன், அவருக்கு நான் ஒரு பரிசு கொடுக்கிறேன்' என முத்தம் கொடுத்தார்.
மலையாள நடிகர் சுரேஷ்கோபி, ''இன்றைக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். ஆனாலும் நீங்க வரணும் என தயாரிப்பாளர் பிரஷர் கொடுத்தார். தனி விமானத்தை ஏற்பாடு செய்தார். அதில் பயணம் செய்ய எனக்கு ஒத்து வராது. ஆகவே பயணிகள் விமானத்தில் வந்தேன். கொஞ்சம் லேட்டாகிவிட்டது. மலையாளிகள் இந்த படத்தில் அதிகம் பணியாற்றியது மகிழ்ச்சி '' என்று பேசிவிட்டு, எஸ்பிபியின் இளையநிலா பாடலை பாடினார்.