ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம், ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், சென்சார் பிரச்னை, கோர்ட் தலையீடு காரணமாக இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என பல வித சிக்கல்களால் எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலை. இப்போது படக்குழு கோர்ட்டில் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுகிறார்கள். இது தொடர்பாக ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மனு அளித்துள்ளது. இதனால் முன்னமே சென்சார் போர்டு சொன்னபடி, ஜனநாயகன் மறு தணிக்கைக்கு செல்கிறது என்று கூறப்படுகிறது.
அதில் 10 உறுப்பினர்கள் மற்றும் சென்சார்போர்டு மாநில தலைவர் படம் பார்த்து தங்கள் கருத்துகளை சொல்வார்கள். அதற்கேற்ப கட், மியூட் கொடுத்து, சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடைமுறையால் படம் விரைவில் ரிலீஸ் ஆகலாம்.
மறு தணிக்கையிலும் பிரச்னை ஏற்பட்டால், அதிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டால், சென்சாரில் அடுத்தகட்ட இன்னொரு மறுதணிக்கை செல்லலாம். அதிலும் சிக்கல் என்றால் மீண்டும் கோர்ட்டை அணுக வேண்டும் என்பது விதி. ஆகவே, ஜனநாயகன் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது. விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




