அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி சில மாதங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியான டப்பா கார்ட்டல் என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதில் நடிகை ஜோதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த காதல் தி கோர் என்கிற படத்தை ஜோதிகா நடித்திருந்தார். இந்தப்படத்தை பார்த்த ஷபானா ஆஸ்மி, அதில் மம்முட்டியின் கதாபாத்திரத்தையும், அவர்கள் நடிப்பையும் பார்த்து பிரமித்துப்போனதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஜோதிகா நடித்திருந்தார் என்பதற்காகத்தான் காதல் ; தி கோர் படத்தை பார்த்தேன். ஆனால் அதில் மம்முட்டியின் கதாபாத்திரமும் நடிப்பும் என்னை திகைக்க வைத்து விட்டது.. இப்படி துணிச்சலாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டில் எந்த ஹீரோக்களாவது தயாராக இருக்கிறார்களா ? இல்லை இப்படிப்பட்ட படத்தை அவர் போல துணிச்சலாக தயாரிக்க முன் வருவார்களா ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். காதல் ; தி கோர் படத்தை ஜியோ பேபி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.