அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கடந்த ஆகஸ்டு 14ம் தேதி திரைக்கு வந்த படம் 'கூலி'. இந்த படம் திரைக்கு வந்தபோதே வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. என்றாலும் ஒரு வழியாக இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. அதோடு இந்த கூலி படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் கொடுத்ததால் பெண்களும், சிறுவர்களுடன் அதிகமாக தியேட்டருக்கு வரவில்லை. அதனால் ஓடிடியில் திரையிடும்போது இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் கூலி படம் வெளியாகி இருக்கும் நிலையில், பெரிதாக வரவேற்பு இல்லையாம். அதோடு கூலி படத்தை பார்த்துவிட்டு பெரும்பாலானோர் இந்த படத்தின் வன்முறை காட்சிகள் உச்சம் தொடுகிறது. அந்த காட்சிகளை பார்க்கவே முடியவில்லை. இந்த லோகேஷ் கனகராஜ்க்கு இதை விட்டா வேறு கதையே கிடையாதா. அதுவும் ரஜினியை வைத்து இப்படியா ஒரு படம் எடுப்பது என்று மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.