விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
ஓடிடி ரிலீஸில் இந்த வாரப் பட்டியலில் கூலி முதல் மீஷா வரை வரிசைக்கட்டி நிற்கிறது. அவை எந்தெந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் 'கூலி'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் வசூலில் வாரிக்குவித்தது. சுமார் 500 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம் இன்று (செப்.11ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மீஷா
நடிகர் கதிர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'மீஷா'. அரசியல் கதை களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் நாளை (செப்.12ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பகாசுரா ரெஸ்டாரண்ட்(Bakasura Restaurant)
தெலுங்கு மொழியில் வெளியான காமெடி, திகில் படம் 'பகாசுரன் ரெஸ்டாரண்ட்(Bakasura Restaurant)'. ரெஸ்டாரண்ட் ஒன்றில் நான்கு இளைஞர்கள் சாப்பிடப் போகும் போது, நடைபெறும் அமானுஷங்களை உள்ளடக்கி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை(செப்.12ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சு ப்ரம் சோ (Su From So)
கன்னட இயக்குநர் ஜே.பி. துமினாட் இயக்கத்தில் வெளிவந்த காமெடி, திகில் படம் 'சு ப்ரம் சோ (Su From So)'. இளைஞர் ஒருவருக்குப் பேய் பிடித்ததாக அடைத்து வைக்கப்படுவதனால், ஏற்படும் பிரச்னையை காமெடி கலந்து திரைக்கதையாக அமைத்துள்ளார் இயக்குநர். கன்னட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் செப்.9ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டிடெக்டிவ் உஜ்வலன்" (Detective Ujjwalan)
மலையாள இயக்குநர்கள் இந்திரனீல் கோபீ கிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி ஆகியோர் எழுதி இயக்கிய திரைப்படம் 'டிடெக்டிவ் உஜ்வலன்" (Detective Ujjwalan)'. கொலையே நடக்காத கிராமத்தில் நடைபெறும் கொலையைக் கண்டுபிடிக்க, நாயகன் டிடெக்டிவ்வாக மாறி கண்டுபிடித்தாரா?, இல்லையா? என்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏற்கனவே வெளியான நிலையில் நாளை(செப்.12ம் தேதி) லைன்ஸ் கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டு யூ வானா பார்ட்னர் (Do You Wanna Partner)
நடிகை தமன்னா நடிப்பில் வெளியாக உள்ள தொடர் டு யூ வானா பார்ட்னர, 'Do You Wanna Partner'. இவருடன் டயானா பென்டி நடித்துள்ளார். உயிர் தோழிகளான இருவரும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகின் முரண்பாடுகளுக்கு எதிராக களமிறங்குவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நாளை(செப்.12ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.