சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

'பன்னீர் புஷ்பங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சுரேஷ். தமிழ், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2006ம் ஆண்டு 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்ர கேரக்டர்களில் நடித்து வந்தார்.
தற்போது மீண்டும் தமிழில் ஹீரோவாக நடிக்கிறார். 'ஹரா' படத்தின் மூலம் மோகனை மீண்டும் ஹீரோவாக்கிய விஜய்ஸ்ரீ தற்போது சுரேஷை ஹீரோவாக நடிக்க வைக்கிறார். மலேசியாவை சேர்ந்த ஜிவி இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்தியா மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 19 அன்று மலேசியாவில் வெளியாகிறது.