குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
'தமிழ் படம்' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகாந்த், தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசுவோம், இறுதி சுற்று, காவியத் தலைவன், விக்ரம் வேதா, கேம் ஓவர், ஜெகமே தந்திரம், பிரம்மயுகம்(மலையாளம்) உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்.
தற்போது இயக்குனராகி 'தி டெஸ்ட்' என்ற படத்தை இயக்கி உள்ளார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படம் பற்றி சசிகாந்த் அளித்த பேட்டி வருமாறு: திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளரானேன். 12 வருடங்களுக்கு முன்பு எழுதிய 'தி டெஸ்ட்' கதையை இப்போதுதான் இயக்க முடிந்தது.
இது கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம். இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடப்பது போன்ற காட்சி இடம் பெறுகிறது. சித்தார்த் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மேட்ச் படமானது.
கதைப்படி மாதவன், நயன்தாரா, சித்தார்த், கேரக்டர்களுக்கு கடினமான காலக்கட்டம் ஏற்படும்போது, எப்படி அதை எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது கதை. ஒரேநாளில் பல கோடி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என்றார்.