பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கிய கே.பி.ஜெகன், 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரே இயக்கவும் செய்கிறார். இந்த படத்தை 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கே.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறும்போது ''என்னுடைய வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும்'' என்றார்.




