சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கராத்தே மாஸ்டரான ஹுசைனி சினிமாவில் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்திருக்கிறார். கே.பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை படங்களில் நடித்தார். ரஜினி நடித்த 'ப்ளட் ஸ்டோன்' என்ற ஹாலிவுட் படத்திலும் விஜய்யுடன் 'பத்ரி' படத்திலும், விஜய் சேதுபதியுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தனக்கு புற்று நோய் ஏற்பட்டிருப்பதாகவும், தான் இன்னும் சில நாட்களே உயிருடன் இருப்பேன் என்றும் வீடியோ வெளியிட்டார். நடிகர் விஜய், பவன் கல்யாண் ஆகியோர் தனக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு 5 லட்சம் மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி வழங்கி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து தற்போது ஹுசைனி வீடியோ வெளியிட்டுள்ளார்.




