சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் |
'பிரேமம்' படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து மலையாளம், தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் “கொடி, தள்ளிப் போகாதே, சைரன்” ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இன்னும் ஒரு வெற்றிப் படத்தில் கூட தமிழில் நடிக்கவில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் ஜோடியாக 'பைசன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்த மற்றொரு தமிழ்ப் படமான 'லாக்டவுன்' படத்தின் டீசர் இன்று காலையில் வெளியானது. இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த நாளிலிருந்து இதுவரை இப்படம் பற்றி தன் சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிடாமல் இருக்கிறார் அனுபமா.
இத்தனைக்கும் இந்தப் படத்தில் அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தைப் பற்றிக் கூட அவர் எதுவும் பதிவிடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் படத்தின் பதிவுகளை அவர் எதற்காகப் புறக்கணிக்கிறார் என்பது தெரியவில்லை.