நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2024ம் ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டது. அவற்றில் 'அரண்மனை 4' படம் மட்டுமே 100 கோடி வசூலைப் பெற்ற ஒரு படமாக இருக்கிறது.
பொதுவாக தமிழ்த் திரைப்படப் பாடல்கள் யு டியூப் தளங்களில் அதிகப் பார்வைகளைப் பெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சில பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைப் பெறும். இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த பாடல்களில் எந்த ஒரு பாடலும் 100 மில்லியன் பார்வைகளைத் தொடவேயில்லை.
இதுவரை வெளிவந்த 100 படங்களில் சராசரியாக ஒரு படத்திற்கு 4 பாடல்கள் என்று வைத்தால் கூட 400 பாடல்கள் வந்திருக்கும். அந்த 400 பாடல்களில் ஒரு பாடல் கூடவா சூப்பர் ஹிட் ஆகவில்லை என்பது வருத்தப்படும் விஷயம்.
அதிகப் பார்வை பெற்ற பாடலாக விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் 'விசில் போடு' பாடல் 57 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இனி வெளியாகும் சில முக்கிய படங்களின் பாடல்களாவது 100 மில்லியன் பார்வைகளைப் பெறுமா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.