'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் |
'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கின்றார்.
இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதுவரை இதில் கதாநாயகியாக யாரும் ஒப்பந்தம் ஆகவில்லை.
இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிஸியாக மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் கொடி, சைரன் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.