சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா, 89 உடல்நலக் குறைவால் நவ., 24ல் காலமானார். அவருக்கு பாலிவுட் திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் அவரது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட உருக்கமான பதிவு வைரலானது.
ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛தரம்ஜீ(தர்மேந்திரா), அன்பான கணவர், இரு பெண்களின்( இஷா, அஹானா) அப்பா, நண்பர், ஞானி, வழிகாட்டி, கவிஞர் என எனக்கு எல்லாமுமாக நீங்கள் இருந்தீர்கள். தன் எளிமையான, நட்பு ரீதியான பழக்க வழக்கங்களால் என் குடும்பத்தின் அனைவரையும் கவர்ந்தவர். எல்லோரிடமும் பாசமும் ஆர்வமும் காட்டியவர்.
பிரபலமாக இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் அவரது திறமையும், பணிவு, எல்லோரையும் சென்றடையும் ஈர்ப்பு ஆகியவை அவரை எல்லா நாயகர்களிலும் தனித்து நிற்கும் ஒப்பற்ற சின்னமாக ஆக்கின. திரைத்துறையில் அவரது நிலையான புகழும் சாதனைகளும் என்றென்றும் நீடிக்கும்.
எனது தனிப்பட்ட இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் என் வாழ்நாள் முழுவதும் நிரப்பப்பட மாட்டாத ஒன்று . பல ஆண்டு இணைந்த வாழ்வுக்குப் பிறகு, எண்ணற்ற நினைவுகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அந்த அத்தனை சிறப்பான தருணங்களையும் மீண்டும் மீண்டும் வாழ்வதற்காக…'' என உருக்கமாக குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.