தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பெங்களூருவைச் சேர்ந்த நிரஞ்சன் முகுந்தன் என்பவர் பாரா ஸ்விம்மிங்கில் பல சாகசங்களை செய்து கிட்டத்தட்ட நூறு பதக்கங்கள் வரை பெற்றுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது தான் தனது வாழ்நாள் லட்சியம் என குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ எப்படியோ ரஜினியின் கவனத்திற்கு செல்லவே அதை தொடர்ந்து நிரஞ்சன் முகுந்தனுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு சமீபத்தில் மைசூரில் நடைபெற்ற ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்தது.
ரஜினியை சந்தித்த அந்த இனிய அனுபவம் குறித்து நிரஞ்சன் முகுந்தன் கூறும்போது, “ரஜினி சார் நான் சென்னையை சேர்ந்தவன் என நினைத்து தற்போது மைசூர் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்னை வந்து சந்திக்க முடியுமா என்று தகவல் அனுப்பி இருந்தார். அதன்பிறகு தான் நான் பெங்களூரை சேர்ந்தவன் என்று சொன்னதும் அப்படியானால் உடனடியாக வாருங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று சந்தித்தேன். அவரை சந்தித்த அந்த தருணத்தை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை.
அவரை சந்திக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமர்ந்து, என்னுடைய பயணங்கள் குறித்து பொறுமையாக நிறைய விசாரித்து கேட்டுக் கொண்டார். கடவுளின் குழந்தை என்று என்னை அழைத்ததுடன் எதிர்காலத்தில் இன்னும் சிறக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நான் நூறாவது பதக்கம் வாங்கும் போது அணிந்திருந்த தொப்பியை எனது கிப்டாக ரஜினி சாருக்கு அளித்தேன்” என்று கூறியுள்ளார்.