முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் ரவி மோகன் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
ஆர்த்தியை பிரிந்த ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் தற்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ரவிமோகன், ஆர்த்தி, கெனிஷா மூவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். விமர்சித்தும் வந்தனர். ஒரு கட்டத்தில் மூவரும் அமைதியாகி விட்டார்கள்.
இந்த நிலையில் ஆர்த்தி, ரவி மோகன் மற்றும் கெனிஷாவை மறைமுகமாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ''ஒரு தெரபிஸ்ட் சொன்னது: பன்றியுடன் சண்டையிடாதே. நீயும் பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள். ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை தாக்கி மற்றவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருப்பதால் ரவி மோகன் மற்றும்கெனிஷாவை ஆர்த்தி மறைமுகமாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.