'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படம் கடந்த மாதம் வெளியானது. படம் வெளியாகி நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு சில புதிய படங்கள் வந்ததால் அந்தப் படங்களுக்காக 'லியோ' படத்தை சில பல தியேட்டர்களிலிருந்து தூக்கினார்கள்.
ஆனால், கார்த்தி நடித்து வெளிவந்த 'ஜப்பான்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதோடு வெளிவந்த ராகவா லாரன்ஸ் நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கும் ஏ சென்டர்களில்தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு படங்களையும் தீபாவளி விடுமுறை நாட்களிலேயே பார்க்க வேண்டிய அதிகமான ரசிகர்கள் பார்த்துவிட்டனர். எனவே, இரண்டாவது வாரத்தில் அந்தப் படத்தை வைத்து தாக்குப் பிடிக்க முடியாது என மீண்டும் 'லியோ' படத்தை இன்று முதல் பல தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்துள்ளார்களாம்.
நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் வந்த வரை வசூல் வரட்டும் என 'லியோ' படத்தை ஓட்ட உள்ளதாகச் சொல்கிறார்கள். இன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்தவாரம் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.