வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்று உலகப் புகழ் பெற்ற அழகியானார் இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய். அதன் பின் தமிழ்ப் படமான 'இருவர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ஹிந்திப் படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைத்தார்.
நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2011ம் ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தை ஆராத்யாவுக்கு இன்று பிறந்த நாள். தனது அன்புமகளின் பிறந்த நாளை முன்னிட்டு பல விதமான எமோஜிக்களுடன் அன்பான, அசத்தலான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
“எனது அன்பான தேவதை ஆராத்யா, நான் உன்னை எல்லையில்லாமல், நிபந்தனையில்லாமல், என்றென்றும் நேசிக்கிறேன். எனது வாழ்க்கையின் கட்டுக்கடங்காத அன்பு நீ. உனக்காக நான் சுவாசிக்கிறேன், என் அன்பே. ஹேப்பி ஹேப்பி ஹேப்பியஸ்ட் 12வது பிறந்தநாள். உன்னை கடவுள் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும். நீயாக இருப்பதற்கு நன்றி, மதிப்பில்லாத அன்பு. உன்னை அதிகமாய் நேசிக்கிறேன், நீதான் மிகச் சிறந்தவள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது குட்டி இளவரசி... உன்னை மிக அதிகமாய் நேசிக்கிறேன்,” என அப்பா அபிஷேக் பச்சன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.