பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தீபாவளிக்கு தங்கள் படம் வெளிவர வேண்டும் என்பது பெரும்பாலான ஹீரோக்களின் ஆசையாக இருக்கும், பெரிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாகும், அந்த வரிசையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்', கார்த்திக் நடித்துள்ள 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா 2' படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்று பின்வாங்கலாம், ஒரு சில புதிதாக களத்தில் குதிக்கலாம்.
என்றாலும் இந்த ஆண்டு தீபாவளி போட்டில் 3 ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின்கள் களத்தில் குதிக்கிறார்கள். சூப்பர் ஹீரோயின்களான ப்ரீ லர்சன், டயோனா பாரிஸ், இமான் வெல்லனி நடித்துள்ள 'தி மார்வெல்ஸ்' படம் வருகிற நவம்பர் 11ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர சாமுவேல் ஜாக்சன் முக்கிய கேக்டரில் நடித்துள்ள இந்த படத்தை டகோஸ்டா இயக்கி உள்ளார். இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மார்வெல் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.