நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான படம் 'மாநாடு'. 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படமாக அமைந்தது. 'டைம் லூப்' படமாக சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படமாக இருந்தது.
படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. அது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, “நாங்கள் இந்த சுவாரசியமான டைம்-லூப் படம் மாநாடு உருவாக்கியபோது, ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினேன். எங்கள் பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று. ஆனால் நீங்கள் அனைவரும் நாங்கள் கற்பனை செய்ததை விட அதிகமாக அதைப் புரிந்துகொண்டீர்கள்!
சினிமாவில் சோதனைகளை கொண்டாடியதற்கு நன்றி. நீங்கள் எங்களை எல்லைகளைத் தள்ள வைக்கிறீர்கள்.. நம்பிக்கைக்கு நன்றி,” என படக்குழுவினரை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தின் இரண்டாம் பாகம் வந்தாலும் நன்றாக இருக்கும் என்று அப்போதே ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அது இன்னும் நடக்காமலேயே உள்ளது.