காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் |

ஹிந்தியில் 'யாரியன் 2' படம் முலம் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். தமிழில் சமீபத்தில் வெளிவந்த 'காந்தா' படம் மூலம் அறிமுகமானார். அடுத்து அவர் தெலுங்கில் நடித்துள்ள 'ஆந்திரா கிங் தலுகா' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. அப்படத்தின் நாயகன் ராம் பொத்தினேனியும், பாக்யஸ்ரீயும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசு சமீபத்தில் வெளியானது.
இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்யஸ்ரீ, “படத்தில் நடிக்கும் போது ராம் உடன் நல்லதொரு பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்கு இடையில் இருப்பது நட்பு மட்டும்தான், ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எங்கள் இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. அதனால், எங்களுக்குள் காதல் என்ற கிசுகிசு அதிகமாகியுள்ளது” என்றார்.
சினிமா காதல் பலவும், நட்பில் ஆரம்பித்து பின்னர் காதலில் போய் முடியும். இவர்கள் நட்பு எப்படி முடியப் போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும்.