ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் 'தி லாஸ்ட் பேக்கப்'. இது ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம். இதன் மூலக் கதையை பிரபல ஒளிப்பதிவாளரும், அகாடமியின் டீனுமான சி.ஜே.ராஜ்குமார் எழுதியுள்ளார். மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படம் தற்போது கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. வருகிற 26ம் தேதி(நாளை) திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பிறகு படம் தொடர்பான விவாதங்களும், கருத்தரங்கும் நடக்கிறது.
இது குறித்து படத்தை இயக்கி உள்ள ஸ்ரீ ரிதன்யா கூறும்போது, "இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. 3030ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் புனைவுகதை. தொழில்நுட்பம் மட்டுமே ஆட்சி செய்யும் எதிர்கால உலகிலும், மனித உணர்வுகள் என்றும் அழியாது என்பதை நெகிழ்ச்சியுடன் பேசுகிறது. மிகுந்த போட்டிக்கு இடையே இந்த படம் கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது" என்றார்.




