மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் ரிலீஸை நோக்கி வேகம் எடுத்துள்ளது. திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது துவங்கியுள்ளன. அந்த வகையில் மும்பை சென்ற கங்குவா படக்குழு அங்கே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஹீரோக்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதுண்டு. அப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரும் சூர்யாவை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார். ஆனால் உடனடியாக எழுந்த சூர்யா, “சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒரே ஒருவர் மட்டுமே. அது எப்போதுமே ரஜினிகாந்த் தான். ஒருவருடைய பட்டத்தை எடுத்து நாம் பேட்ச் ஆக குத்திக்கொள்ளக் கூடாது” என்று கூறி தனது மறுப்பை உடனடியாக வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே. ஆனால் கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்கிற சர்ச்சை அதிக அளவில் சுழன்றடித்தது. குறிப்பாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார். ஆனால் அப்போது விஜய் அதுபற்றி மறுத்து பேசாமல் அமைதி காத்தார். அது பல மாதங்களுக்கு சர்ச்சையாக ஓடியது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சூர்யாவின் இந்த பேச்சு குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் அதிகம் பரப்பி வருவதுடன் வாரிசு பட விழாவின் போது விஜய்யும் இப்படி கூறியிருந்தால் அவரது மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும் என்றும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.