'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் | ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம் |

தமிழ் சினிமாவில் நாட்டியத்திலும் நடிப்பிலும் முன்னணியில் இருந்த பத்மினி, ராகினி சகோதரிகள் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அவற்றில் முக்கியமான படம் 'கொய்தி'. இந்தப் படத்தை முகமத் முகைதீன் இயக்கி இருந்தார். சுரேஷ் என்ற ஹிந்தி நடிகருடன் பத்மினி, ராகினி நடித்திருந்தனர்.
ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெறாத இந்த படத்தை பத்மினி, ராகினி நடித்திருந்ததால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். படத்திற்கு 'மகுடம் காத்த மங்கை' என்று தலைப்பு வைத்தனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார், மருதகாசி தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதினார். இங்கும் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் ஹிட்டானது.