படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவான 'விடுதலை 2' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. அதற்கடுத்து ஓடிடி தளத்தில் தமிழ், மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
படம் தியேட்டர்களில் வெளியான போது அதன் நீளம் 2 மணி நேரம் 46 நிமிடங்களாக இருந்தது. தற்போது கூடுதல் காட்சிகளுடன் 21 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் ஓடும் வரையில் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகத்திற்குக் குறைவான வரவேற்பே கிடைத்தது. இரண்டாம் பாகம் சுவாரசியமாக இல்லாமல் இருந்ததாக விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் இன்னும் கூடுதல் காட்சிகளுடன் 'டைரக்டர்ஸ் கட்' பதிப்பை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியம்தான். இருந்தாலும் ஓடிடியில் படம் நீளம் என்பதையெல்லாம் ரசிகர்கள் கவனத்தில் கொள்வதில்லை. படம் பிடித்தால் பார்ப்பார்கள், இல்லையென்றால் நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள்.