சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் அசுரன் படத்தின் மூலம் பிரபலமான நடிகராக மாறினார். ஆனால், அதன் பிறகு கென் பெரிதளவில் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. கல்லூரி படிப்பை நோக்கி பயணித்திருந்தார்.
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த விடுதலை இரண்டாம் பாகத்தில் கருப்பன் என்கிற கதாபாத்திரத்தில் 10 நிமிடங்கள் தோன்றினாலும் அவரை பாராட்டி வருகின்றனர். தற்போது கென் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில், கூறாயதாவது "கருப்பன் கதாபாத்திரம் குறித்து முதன்முறையாக வெற்றிமாறன் கூறியபோது இந்த கதாபாத்திரத்திற்காக கொஞ்சம் எடை கூட்டி வாட்ட சாட்டமாக இருந்தால் நல்லா இருக்கும்னு தோன்றியது. அதற்காக டயட் முறையை பின்பற்றி 15 நாட்களில் 3 கிலோ எடையை கூட்டினேன் .இது குறித்து வெற்றிமாறனிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நேரடியாக படப்பிடிப்பில் கேமரா முன்னாடி நின்றபோது வெற்றிமாறன் என்னடா பெரிய மனுஷன் மாதிரி இருக்கனு ஆச்சரியமாக கேட்டார் .அதற்கு இந்த படத்திற்காக தான் என கூறியதும் மகிழ்ச்சியாக சரி என்றார்" என கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.