பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் கருணாஸ் மகனான கென் கருணாஸ் 'அசுரன்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். பின்னர் வாத்தி படத்தில் நடித்தார். சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இப்போது பெயரிடப்படாத படத்தின் மூலம் இயக்குனர் ஆகிவிட்டார். அவரே படத்தில் கதைநாயகனாக நடிக்கவும் செய்கிறார். அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான கதையாக இந்த படம் உருவாகிறது. சென்னையில் நடந்த இந்த பட தொடக்க விழாவில் கார்த்தி, விஷால், ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கே.கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கென் கருணாஸை வாழ்த்தினர். இந்த படத்தில் கருணாஸ் நடிக்கிறாரா? அல்லது பாடுகிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.