'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' | பிளாஷ்பேக் : ஒலிம்பிக்கில் ஒலித்த இளையராஜா பாடல் |
விடுதலை படத்திற்கு முன்பே சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க தயாரானார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கினார். தற்போது விடுதலை-2 படம் திரைக்கு வந்து விட்டதால் அடுத்தபடியாக வாடிவாசல் பட வேலைகளை வெற்றிமாறன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு, மூன்று பாகங்களாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை-2 படத்தைப் போலவே இந்த வாடிவாசலும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தடை நீக்கப்பட்டது.
இதற்குள் எப்படிப்பட்ட அரசியல் எல்லாம் இருந்தது என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தில் அவர் சொல்லப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்கிறார்கள்.