லாக் டவுன் கதை இதுவா? | தீபிகா படுகோனே எனது லக்கி நடிகை: காரணம் சொல்கிறார் அட்லி! | 'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா? | தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள் | சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன் | 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் | திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை | பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி | பிளாஷ்பேக்: நயன்தாராவை தவறவிட்ட பார்த்திபன் |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கி, நடித்து உள்ளார். 3டி படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பரோஸ் படம் வெளிவந்த பிறகு மோகன்லால் அளித்த பேட்டி ஒன்றில், "பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு தருகின்ற அன்புக்காகவும், மரியாதைக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் நான் அவர்களுக்கு தந்த பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பம், குழந்தைகளுடன் கண்டுகளிக்க நான் உருவாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.




