பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

மலையாளத்தில் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் 'தொடரும்' திரைப்படம் வெளியானது. இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட 230 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் தருண் மூர்த்தி. மோகன்லாலின் 366வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் பிரியதர்ஷன் சமீபத்தில் விசிட் அடித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் தருண் மூர்த்தி, 'நமது திரைப்பட யுனிவர்சிட்டியே எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது மிகவும் பெருமை' என்று குறிப்பிட்டுள்ளார். மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும் சினிமாவில் அவர்கள் நுழைவதற்கு முன்பிருந்தே நண்பர்கள். கிட்டத்தட்ட 35 படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். பிரியதர்ஷன் அடுத்து தான் இயக்க இருக்கும் தனது நூறாவது படத்தில் மோகன்லால் தான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.