சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. இதில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது.
இந்த படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக இருந்த நிலையில், கரூர் சம்பவம் எதிரொலியாக அந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வாரத்தில் முதல் பாடலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விஜய், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நிற்க, அவரை மக்கள் அனைவரும் தொட்டு வரவேற்பது போல் இடம்பெற்றுள்ளது. திடீரென போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் வைரலாக்கிய நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் படத்தின் முதல் பாடல் நவ., 8ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.




