ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா” ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மலையாள நடிகர்களான சுராச் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து விக்ரம் மேலாளர் சூர்யநாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக, மிக, மிக அதிகமாக உள்ளது. இன்று அனைவரின் நல்லாசியுடன் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு துவக்கம். அவர்களின் எதிர்பார்ப்பைவிட பன் மடங்கு 'வீர தீர சூரன்' பூர்த்தி செய்து, மிகப் பெரிய வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்பதில் உறுதியுடன், இறைவனின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.