தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' |

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை சுதா இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த படம் தள்ளி வைக்கப்பட்டு அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. அதனால் தனது புதிய படத்தை துருவ் விக்ரம் நடிப்பில் இயக்கப் போகிறார் சுதா. இந்த படம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.