மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜா. சென்னை, தி.நகரில் இவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி நேகாவின் தங்க நகைகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக இவரது வீட்டு பணிப்பெண் லட்சுமி என்பவர் மீது சந்தேகம் வர அவர் மீது மாம்பலம் போலீசில் புகார் அளித்தார் ஞானவேல்ராஜா. இதையடுத்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், நகையை தொலைத்துவிட்டு தன் தாய் மீது பழி போடுவதாகவும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறி ஞானவேல் மீது லட்சுமியின் மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.