''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படம் நாளை ஆக., 15ல் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், அவருடைய அப்பாவும் வாங்கிய கடன் தொகை பாக்கி காரணமாக 'தங்கலான்' படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அதாவது அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன். பணத்தை திருப்பி தராததால் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பணத்தை திருப்பி தரச் சொல்லி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது திவாலானவர்கள் என அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'தங்கலான்' பட வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடி, 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஆக., 14) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் ரூ.1 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்மூலம் தங்கலான் வெளியீட்டில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. நாளை திட்டமிட்டப்படி படம் உலகம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.