ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி | ‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல் | ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை |
தமிழில் டிமான்டி காலனி என்கிற வித்தியாசமான ஹாரர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா என இரண்டு படங்களை இவர் இயக்கினார். இவற்றில் இமைக்கா நொடிகள் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் கோப்ரா படம் தோல்வி அடைந்தது..
இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுத்த பேட்டியில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் தோல்வியடைந்தது எதனால் என மனம் திறந்து உள்ளார் அஜய் ஞானமுத்து.
இது பற்றி அவர் கூறும்போது, 'கோப்ரா படத்திற்காக அதன் தயாரிப்பாளரிடம் என்னிடம் இருந்த கதையை கூறினேன். ஆனால் அது தயாரிப்பாளரை கவரவில்லை. வேறு ஒரு கதாசிரியரிடம் இருந்து அவரது கதையை வாங்கி மெருகேற்றி சென்று கூறினேன். அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. பின்னர் அவரே எனக்கு வேறு ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து இதை பண்ணுங்கள் என்று கூறினார். எனக்கு அந்த கதையில் பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் இதிலேயே எட்டு மாதங்கள் கடந்து விட்டதால் அந்த கதையில் காட்சிகளில், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து உருவாக்கினோம். ஆனாலும் மையக்கதை என்பது பலவீனமாக இருந்ததால் அந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை., அதிருப்தியுடன் தான் அந்த படத்தை இயக்கினேன், அதன் பிறகு தான் இந்த படத்தை நாம் இயக்கி இருக்கக் கூடாது என்று உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.