ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை | சசிகுமாரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர் | இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா | திரைக்கதை ஆசிரியரான நடிகை | இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா |
தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோவான நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா தற்போது இளம் முன்னணி நடிகராக படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவும் ஒன்றாக இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டு வந்தன. அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்கு பிரிவு ஏற்படும் என்றும், அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார். இவரது இந்த பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சு இவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள விஷ்ணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எதையும் கூறவில்லை. ஜோதிட கணிப்பை தான் கூறினேன். இனிமேல் நான் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து என்னுடைய கணிப்பை பொதுவெளியில் கூறப்போவதில்லை” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார்.