முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் |

தெலுங்கு திரையுலகை பொருத்தவரை பிரபல சீனியர் ஹீரோக்களின் வாரிசுகள் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளும் அவ்வப்போது திரையுலகில் கதாநாயகர்களாக அறிமுகமாகி வருகிறார்கள். பலர் தங்களது திறமையால் சாதித்து தங்களுக்கு என ஒரு இடத்தையும் தக்க வைத்து கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் வாரிசுகள் யாரும் இதுவரை சினிமாவில் இறங்கவில்லையே என பலருக்கும் ஆச்சரியமும் சந்தேகமும் கூட எழுந்திருக்கும். இந்த நிலையில் விரைவில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா தேஜா கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 6ம் தேதி மோக்சக்னா தேஜாவின் பிறந்தநாளில் நடைபெற இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் இயக்குனரின் முந்தைய படத்தைப் போல ஒரு சூப்பர் மேன் கதையம்சத்துடன் தான் உருவாக இருக்கிறதாம். முதல் படத்திலேயே சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பாலகிருஷ்ணாவின் மகன். அது மட்டுமல்ல பாலகிருஷ்ணாவின் மகளான நந்தமூரி தேஜஸ்வினி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.