மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | இயக்குனர் பாலாவிற்கு விழா | விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல் சினிமாவில் ஆர்வம் உள்ள இவர் ‛சகாப்தம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது.
விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி படை தலைவன் படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடிக்கவில்லை. மாறாக விஜயகாந்த்தையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்காதது பற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதுபற்றி இயக்குனர் அன்பு வெளியிட்ட அறிக்கை : சண்முக பாண்டியன் கலை உலக வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு அவரது படத்தில் நடிப்பதாக லாரன்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார். படை தலைவன் படக்குழு சார்பாக நானும், சண்முக பாண்டியனும் அவரை நேரில் சந்தித்தோம். படத்தின் கதையை கேட்டவர் தானும் நடிப்பதாக கூறினார். அதற்கான பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு சிறு தயக்கம் இருந்தது. படம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ராகவா லாரன்ஸிற்கான கதாபாத்திரம் கனமான வேடமாக இருக்குமா என தோன்றியது.
தனிப்பட்ட முறையில் மீண்டும் அவரை நான் சந்தித்து இதுபற்றி எடுத்து சொன்னேன். என் முடிவுக்கு அவரும் சம்மதம் சொன்னார். மேலும் படை தலைவன் பட புரொமோஷனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்க முடியாமல் போனதன் உண்மையான காரணம் அறியாமல் அவரை பற்றி உண்மைக்கு மாறான வதந்திகள் வலைதளங்களில் பரவி வருகின்றன. அவர்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறிக்கை''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.