பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கில் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படம் ‛தண்டேல்'. பிப்ரவரி 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதால் தற்போது படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் படம் மீனவர் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. கதைப்படி மீனவரான நாக சைதன்யா, மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது தவறுதலாக பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்தபோது, அங்குள்ள காவல் துறையினர் அவரை கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதையடுத்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, இந்தியாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் சில சக்தி வாய்ந்த வசனங்களை பேசும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
அதனால் இந்த படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் வெளியிட்டு பான் இந்தியா படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஹிந்தி சினிமா ரசிகர்கள் தேச பக்தி படங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதால் இந்த தண்டேல் படத்தை பாலிவுட்டில் பிரமாண்டமாக வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக புரமோஷன்களில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.