2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு |

சமீப வருடங்களாக கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்கும் போக்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் நடிகை சாவித்திரியின் பயோபிக்கை மகாநடி என்கிற பெயரில் வெளியிட்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா திரைப்படம் கூட தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் இன்னொரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறாக பிரபல கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கை சினிமாவாக எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது. இதில் எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடிக்க இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் சாய்பல்லவி தண்டேல் என்கிற படத்தில் நடித்துள்ளதால் இந்த பயோபிக்கில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்றும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.