ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆனந்தினி பாலா இயக்கத்தில் ரேச்சல் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். பாபு ராஜ், வினீத் தட்டில், ரோஷன் பசீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இறைச்சி வெட்டும் பெண்ணாக ரேச்சல் நடித்துள்ளனர். ஆக் ஷன் நிறைந்த பழிவாங்கல் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாக வேண்டியது. சில பிரச்னையால் வெளியாகவில்லை.
இந்நிலையில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ‛‛சரியான நேரம் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளோம்'' என தெரிவித்துள்ளனர். அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள் குறிப்பிடவில்லை. இம்மாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.