பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்த 'கருப்பு' படம் நேற்று தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. மே 14ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டிய படம் பைனான்ஸ் சிக்கல் காரணமாக ஒரு நாள் தள்ளி நேற்று மே 15ல் வெளியானது.
மே 14ம் தேதியன்றே படத்திற்கான முன்பதிவு சிறப்பாக இருந்தது. அன்றைய தினமே படம் வெளிவந்திருந்தால் படத்தின் முதல் நாள் வசூல் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்கிறார்கள். ஒரு நாள் தாமதமாக வந்தாலும் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
நேற்று முதல் நாளில் சுமார் 20 கோடி வசூலைப் பெற்றிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கிராமத்து எல்லை தெய்வமான கருப்பசாமி கதையின் மையமாக இருப்பது படத்திற்கு பிளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுக்கு இப்படம் ஒரு தியேட்டர் வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.