டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார் ஹனிரோஸ். “இதுநாள் வரை அமைதியாக இருந்த நான் இப்போது சட்டம் பெண்களுக்காக என்னென்ன பாதுகாப்பு உரிமைகளை வழங்கியுள்ளதோ அதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டு இது போன்ற சைபர் கிரைம் ஆசாமிகள் மீது சட்டரீதியான போரை துவங்கியுள்ளேன்” என்று சமீபத்தில் கூறியவர், ஞாயிறு இரவு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார்.
இதன் உடனடி நடவடிக்கையாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார். மேலும் இதற்கு முன் ஹனிரோஸ் கூறியபோது, செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீதும் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளார். விரைவில் அந்த நபரும் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




