அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் |
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஹனிரோஸ் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் சில நபர்களின் சைபர் தாக்குதலுக்கு ஆளானவர், ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 பேர் மீது புகார் அளித்தார். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவமானப்படுத்தும் விதமாக பேசி வந்த பிரபலமான நகைக்கடை அதிபர் பாபி செம்மனூர் என்பவரும் இந்த புகாருக்கு ஆளாகி போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மீடியா ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ளும் ராகுல் ஈஸ்வர் என்கிற நபர் சோசியல் மீடியாவில் தன்னை குறித்து அவதூறாக வெளியிட்ட கமெண்ட்டுகள் தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தூண்டும் அளவிற்கு இருந்தது என்று கூறி அவர் மீதும் ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் விண்ணப்பித்திருந்தார் ராகுல் ஈஸ்வர்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் பிரச்சனையின் அடிப்படையில் ராகுல் ஈஸ்வருக்கு முன்ஜாமின் தர மறுத்துவிட்டது. அதே சமயம் போலீசார் இது குறித்த விசாரணையை தொடர்ந்து, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதன் பெயரில் தான் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.