நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

மலையாள நடிகை ஹனிரோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை சோசியல் மீடியா மூலமாக சைபர் தாக்குதல் நடத்தி அவதூறு பரப்பினார்கள், மிரட்டல் விடுத்தார்கள் என்று கிட்டத்தட்ட 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக செல்வாக்கு மிகுந்த செம்மனூர் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இதே போன்று மீடியா ஆர்வலர் என தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ராகுல் ஈஸ்வர் என்பவர் தொடர்ந்து நடிகை ஹனிரோஸ் மீது சோசியல் மீடியாவில் தாக்குதல் நடத்தி வந்துள்ளார். குறிப்பாக பாபி செம்மனூர் கைது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, ஹனிரோஸ் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹனிரோஸ் அளித்த புகாரின் பேரில் ராகுல் ஈஸ்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் ராகுல் ஈஸ்வர். இவர் மீது ஹனிரோஸ் அளித்துள்ள புகாரில் ராகுல் ஈஸ்வரின் அவதூறான வார்த்தைகளும் சோசியல் மீடியாவில் அவரது மிரட்டல்களும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற அளவிற்கு எண்ணத்தை தூண்டின என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் ராகுலுக்கு முன் ஜாமின் கிடைப்பது சிக்கல் தான் என்று சொல்லப்படுகிறது.