ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த பாய் பிரண்ட் என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழிலும் 'முதல் கனவே', 'சிங்கம் புலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிக பிரபலமானார். இவரை இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பேர் பின் தொடர்பவர்கள் உள்ளனர். ஹனி ரோஸ் அழகின் ரகசியம் அறுவை சிகிச்சைகள் தான் என்று சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வந்தனர்.
இதுபற்றி சமீபத்தில் ஹனி ரோஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது "நான் அழகிற்காக எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. கடவுள் தந்த அழகை தவிர அழகைப் பராமரிக்க சில பவுடர்களை மட்டும் தான் பயன்படுத்துகிறேன். நடிகையாக சினிமா துறையில் இருப்பது எளிதானது அல்ல. நம் உடலை அழகாய் படைப்பது கடவுள் தான்" என்றார்.