பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா | ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் |

கடந்த 2022ம் ஆண்டில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'கட்டா குஸ்தி' . சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை செல்லா அய்யாவு மேற்கொண்டு வந்தார். தற்போது கட்டா குஸ்தி 2ம் பாகத்தை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.
முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், அனைவரும் ரசிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.